புதன், 27 ஏப்ரல், 2011

யோகி ஒரு துறவியை விட உயர்ந்தவன்.


"யோகி ஒரு துறவியை விட உயர்ந்தவன். புனித நூல்களில் குறிப்பிட்டுள்ள தேவர்களையும் விட இவன் உயர்ந்தவன். குறிக்கோள்களோடு கூடிய செயல்களை செய்பவர்களைக் காட்டிலும் யோகி உயர்ந்தவன். ஆகவே அர்ஜுனா, நீ ஒரு யோகியாவாய்" (கீதை VI:46)

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

நமஸ்காரம்.


யோகக் கலை என்கிற அற்புத வாழ்வியல் விஞ்ஞானத்தை அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பினை உருவாக்கித் தந்த யோகீஸ்வரனான பரமசிவனுக்கும், அகில புவன தாயான பராசக்திக்கும், என்னை இவ்வுலகில் அறிமுகப்படுத்தி ஆளாக்கிய என் தாய் தந்தையருக்கும், எழுத்தறிவித்த ஆசானுக்கும், எத்தனையோ கால கட்டங்களில் துணை நின்ற பல குருமார்களுக்கும், எனது ஆசானாய் விளங்கும் பிரம்மஞானி அறிந்தார்க்கிநியனாருக்கும், அவரது பிரதம சீடராய் விளங்கி சந்திரகலை யோகத்தை எனக்கு பயிற்றுவித்த வடபழனி சித்தருக்கும், இப்போதைய எனது யோகா ஆசானாய் விளங்கிவரும், யோகி டாக்டர் திரு.தி.ஆ.கிருஷ்ணன் அவர்களுக்கும் சித்திரா பவுர்ணமி நாளான இந்த நிறை நாளில் இந்த வலைப பதிவை காணிக்கையாக்குகிறேன்.

எந்தரோ மஹானுபாவுலு,
அந்தரிகி வந்தனமுலு.

அஷ்வின்ஜி.